பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ் திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே
விளக்கம்
பறை = ஒரு வகையான தோற்கருவி. அயலெல்லாம் = ஊர்ப் புறங்களில், திருக்கோயிலிலும் கோயிலைச் சூழ்ந்த வீதிகளிலும் எழுகின்ற ஓசை, ஊர்ப் புறங்களில் கேட்கின்றது என்று கூறுவதன் மூலம், மிகவும் அதிகமான மக்கள் பறைக்கருவியை முழக்குவதிலும், இசைப் பாடல்கள் பாடுவதிலும், வேதங்கள் ஓதுவதிலும் ஈடுபட்டனர் என்பதை அப்பர் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
மிகவும் அதிகமான மக்கள் பங்கெடுத்துக் கொண்டு எழுப்பும் பறை எனப்படும் இசைக்கருவியின் ஓசையும், இறைவைனைக் குறித்து பாடப்படும் பாடல்களின் ஓசையும், மறைகளின் ஓசையும் கலந்து ஒலிக்கின்ற பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூர் ஈசனை எனது உள்ளம் எண்ணுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

