ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

57. பாறலைத்த படுவெண் - பாடல் 7

வெண்மை நிறத்தில் உள்ளதும்

Updated On :6 ஏப்ரல் 2017, 12:23 pm

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை ஆர் குழலாளை ஒர் பாகமா
ஆனை ஈருரியார் அன்னியூரரே
 

விளக்கம்

முதல் அடியின் கடைசியில் வரும் உழல் என்ற சொல்லினை அடுத்த அடியின் முதற் சொல்லுடன் சேர்த்து உழல்வானை என்று பொருள் கொள்ள வேண்டும்.

பொழிப்புரை

தசைப்பற்று கொண்டதும் வெண்மை நிறத்தில் உள்ளதும் ஆகிய பிரமனின் தலையில் பலி கொள்வதற்காக ஊரெல்லாம் திரியும் பெருமானை வானவர்கள் வணங்குகின்றார்கள். தேன் போன்று இனிய குரலினை உடைய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்றுள்ள பெருமான், குருதி சொட்டும் யானையின் தோலை போர்வையாகத் தனது உடலின் மீது போர்த்தவர் ஆவார். அவர்தான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.