பாடல் 6:
குழலும் கொன்றையும் கூவிள மத்தமும்
தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான்
அழகன் ஆவடு தண்டுறையா எனக்
கழலும் கைவளை காரிகையாளுக்கே
விளக்கம்:
இறைவனுடன் சேராது ஏக்கத்தில் இருக்கும் தனது மகள், அந்த ஏக்கத்தினால் உடல் மெலிந்து தனது கை வளையல்கள் கழன்று வருந்தும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. குழல்=சுருண்ட முடியினை உடைய சடை தையல்=பெண், இங்கே பார்வதி தேவி;
பொழிப்புரை:
தனது சுருண்ட சடைமுடியில் கொன்றை மலரையும், வில்வ இலைகளையும், ஊமத்தை மலர்களையும் தாங்கியவனே, உள்ளங்கையினில் தீப்பிழம்பை ஏந்தியவாறு நடனம் ஆடுபவனே, உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் தாங்கியவனே, ஆவடுதுறை என்று அழைக்கப்படும் குளிர்ந்த தலத்தில் உறையும் அழகனே என்று, எந்நேரத்திலும் இறைவனை குறிப்பிட்டவாறு இருக்கும் எனது மகள், அவனுடன் இணையாத ஏக்கத்தினால் உடல் இளைத்து கைகள் மெலிந்து கை வளையல்கள் கழலும் நிலையில் இருக்கின்றாள். ஆவடுதுறை இறைவனே, நீர் தான் அவளது ஏக்கத்தினை போக்கி, அவள் உடல் நலத்துடன் இருக்குமாறு அருள் புரிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


