கேழல் வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே
ஏழையேன் ஏழையேன் என் செய்கேன் எந்தை பெம்மான்
மாழை ஒண் கண்ணினார்கள் வலை தனில்
மயங்குகின்றேன்
கூழை ஏறுடைய செல்வா கோடிகா உடைய கோவே
விளக்கம்
அப்பர் பிரான் இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் துறவியாக வாழ்ந்த்தை நாம் அனைவரும் அறிவோம். தன்னை குறையுடைவனாக சுட்டிக்காட்டி, அந்த குறையினைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பாணி. அந்த வழியில் பெண்களின் வலையில் தான் மயங்கி இறைவனை வழிபடாது இருந்ததாக அப்பர் பிரான் உணர்த்தி, இல்வாழ்க்கையில் ஈடுபட்டாலும் இறைவனை மறவாமல் வழிபட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல். ஏழை = அறிவினில் ஏழையாக திகழ்ந்து மெய்ப்பொருளை கண்டு கொண்டு நிலையான இன்பத்தில் திளைக்காமல், சிற்றின்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிலை. மாழை = அழகு. ஒண்கண் = ஒளி வீசும் கண்கள். கூழையேறு = உயரத்தில் குறைந்த எருது.
பொழிப்புரை
பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் செருக்கினை அடக்கி, பன்றியின் வெண்மை நிறம் கொண்ட பல்லினை தனது மார்பினில் அணிந்தவனே, ஒளிவீசும் மார்பினை உடையவனே, குறைந்த உயரத்தினை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவனே, எனது தந்தையாகிய தலைவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய். அறிவினில் மிகவும் ஏழையாக இருந்து மெய்ப்பொருளின் உண்மையை புரிந்து கொள்ளாமல் வருந்தும் அடியேன், அழகாக விளங்கும் பெண்களின் ஒளி வீசி மயக்கும் கண்களின் வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன்; தலைவனே நீதான் அந்த மயக்கத்திலிருந்து என்னை விடுவித்து, உய்யும் வழியில் செல்ல அருள் புரிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

