பாடல் 10:
வெங்கண் வாளரவு ஆட்டி வெருட்டுவர்
அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற்கு அரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே
விளக்கம்:
வெங்கண்=கொடிய கண்கள்: வாளரவு=ஒளிவீசும் பாம்பு: அடிக்கடித் தனது தோலை உரிப்பதால் பாம்பின் உடல் ஒளி வீசும். அங்கணார்=அழகிய கண்களை உடைய சிவபெருமான். பதிகத்தின் நான்கு அடிகளிலும் கண் என்ற சொல் வருவதை நாம் உணரலாம்.
பொழிப்புரை:
கொடிய கண்களையும், ஒளி வீசும் உடலையும் உடைய பாம்புகளைத் தனது உடலில் சுற்றிக் கொண்டு அவற்றை, தனது விருப்பம் போல் ஆட்டுபவர் சிவபெருமான். அழகிய கண்களை உடைய அவர், அடியார்களுக்கு எப்போதும் அருள் புரிபவராக இருக்கின்றார். தாமரை போன்று சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும், அடி முடி காண முடியாமல் அவர்கள் தேடுவதற்கு அரியவராக, நீண்ட தீப்பிழம்பாக காட்சி அளித்த சிவபெருமான், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவர். அவர் பாலைத்துறையில் உறைகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


