பாடல் 7:
ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கினதாமே
விளக்கம்:
ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் சிவபெருமானால் படைக்கப்படும் உயரினங்கள், தாவரம், நீரில் வாழ்வன, ஊர்வன, நடப்பன, பறப்பன, மனிதன், தேவர் ஆகிய ஏழு வகைகளில் அடங்கும். சிவபிரானால் தோற்றுவிக்கப்பட்ட கடல்கள் ஏழு; அவையாவன, உப்பு, தேன், தயிர், பால், நெய், கருப்பஞ்சாறு, மற்றும் நீர். அவர் ஆளுகைக்கு உட்பட்ட கீழ் மேல் உலகங்கள் ஏழு ஆகும். அவையாவன; உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், சுவர்கலோகம், ஜனலோகம், தவலோகம், மகாலோகம் மற்றும் சத்யலோகம். கீழேழ் உலகங்கள், அதலம், விதலம், சுதலம், நிதலம். தராதலம், இரசாதலம், பாதாளம். ஏழு வகையான இசைகள், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப்படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ் கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் என்று சம்பந்தப் பெருமானும் தனது திருநள்ளாறு (போகமார்த்த பூண்முலையாள்) பதிகத்தில் குறிப்பிடுவது இங்கே நினைவு கூறத்தக்கது.
பொழிப்புரை:
ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


