பாடல் 6
வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன்
இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதி வை ஈங்கு
இகழில்
அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு யாரறிவார்
செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே
விளக்கம்:
விழுப்பதன் முன்=வீழ்த்துவதன் முன்னர்; இகழில்=அலட்சியம் செய்தல்; செம்மை=வீடுபேறு. விரவுதல்=சேர்ந்து இருத்தல், நிறைந்து இருத்தல்.
பொழிப்புரை:
தீயினைப் போன்று கொடிய இயமனின் தூதுவர்கள் ஒன்று சேர்ந்து என்னை வீழ்த்தி பல கொடுமைகளுக்கு ஆளாக்கும் முன்னர், இந்தப் பிறவியிலேயே உனது திருப்பாதங்களை எனது தலை மீது பதிப்பதன் மூலம், உனது பாதங்களின் நினைவினை உறுதியாக எனது நெஞ்சினில் எழுதி வைப்பாயாக. சத்திமுற்றத்தில் உறையும் வீடுபேறு அருளவல்ல சிவபிரானே, நீ எனக்கு அடுத்த பிறவியில் புரியும் அருட்செயல்கள், இங்குள்ளவர் அறிய முடியாது. எனவே நீ எனது வேண்டுகோளை அலட்சியம் செய்யாது இப்போதே அருள் புரியவேண்டும். .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


