பாடல் 5:
பண்டொர் நாள் இகழ்வான் பழித் தக்கனார்
கொண்ட வேள்விக் குமண்டை அது கெட
தண்ட மா விதாதாவின் தலை கொண்ட
செண்டர் போல் திரு நாகேச்சரவரே
விளக்கம்:
செண்டர்=செண்டு ஆயுதத்தை உடையவர்; தண்டம்=தண்டனையாக; விதாதா=வேள்வித் தலைவன்; குமண்டை=செருக்குடன் செய்யப்பட்ட செயல்; வான்பழி=மிகுந்த பழி; தக்கனுக்கு ஆர் விகுதி, அவனை இழிவு செய்யும் நோக்கத்துடன் கொடுக்கப் பட்டுள்ளது. தக்ஷன் ,முதலான பாம்புகள் வணங்கிய பெருமானைக் கண்ட அப்பர் பிரானுக்கு, தக்கனும் தக்கன் செய்த வேள்வியை பெருமான் அழித்ததும் நினைவுக்கு வந்தன போலும். அந்த நிகழ்ச்சியை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். நல்லர் என்று தொடங்கும் பதிகத்தில், தவறான முன்மாதிரியாக அமையும் பொருட்டு செய்யப்பட்ட வேள்வியைத் தடுத்து நிறுத்தி, அத்தகைய வேள்வியினை நடத்த துணிந்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுத்ததன் மூலம், வேதங்களில் சொல்லப்பட்டுள்ள முறைகளுக்கு விரோதமாக தவறான முறையில் செய்யப்படும் வேள்விகளைத் தவிர்த்து உலகத்திற்கு நன்மை புரிந்த செயல் மிகவும் பொருத்தமாக இங்கே சொல்லப் படுகின்றது.
பொழிப்புரை:
பண்டைய நாளில் ஒரு சமயம், பெருமானை இழிவு படுத்தும் நோக்கத்துடன், பெருமானை புறக்கணித்து முன்மாதிரியாக வேள்வி செய்வேன் என்று வேள்வி செய்யத் துணிந்து தனக்கு தீராப் பழியைத் தேடிக் கொண்டவன் தக்கன். சிவபெருமானை விடவும் தான் பெரியவன் என்று தவறாக கருதி செருக்குடன் தக்கன் செய்த யாகத்தை அழித்த பெருமான், அந்த யாகம் செய்வதற்கு தக்கனுக்குத் துணையாக நின்ற வேள்வித் தலைவனது தலையையும் அறுத்தவர் சிவபெருமான். அவர் செண்டு எனப்படும் ஆயுதத்தை உடையவர் ஆவார். அத்தகைய வல்லமை படைத்த பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு இயந்திரத்தில் பெயா், சின்னம் பதிவேற்றம்: ஆட்சியா் ஆய்வு

இன்று சோளிங்கரில் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம்: ராகுல் காந்தி பங்கேற்பு

சுதந்திர தினத்தன்று கூட திமுக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியது: தமிழிசை செளந்தர்ராஜன்

ஏமா(ற்)றுகிறார்கள்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


