ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

93. மடையில் வாளைபாய - பாடல் 5

இடைவிடாது தியானம்

News image
Updated On :2 மே 2018, 4:20 am


பாடல் 5:

    மயிலார் சாயல் மாதோர் பாகமா
    எயிலார் சாய எரித்த எந்தை தன்
    குயிலார் சோலைக் கோலக்காவையே
    பயிலா நிற்கப் பறையும் பாவமே

விளக்கம்:

இறைவனின் அழகினை மூன்றாவது பாடலில் பாடிய சம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த செயலையும் தொடர்ந்து செய்தலை பயிலுதல் என்று கூறுவார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் கல்வி [பயிலுதல் என்று சொல்கின்றனர். எயில்=கோட்டை;  சாய=மடிந்து விழ;  

பொழிப்புரை:

மயில் போன்று அழகினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும். வலிமையான மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்கள் மடிந்து விழும் வண்ணம் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்த எமது தலைவனும் ஆகிய இறைவன் குயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் உடைய கோலக்கா தலத்தில் உறைகின்றான். அவனை இடைவிடாது தியானம் செய்து வணங்க, நமது பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.