ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

94. பூவார் கொன்றை - பாடல் 10

வேதங்களில் நிறைந்துள்ள

News image
Updated On :2 மே 2018, 9:47 am


பாடல் 10:

    பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
    கரக்கும் உரையை விட்டார் காழியார்
    இருக்கின் மலிந்த இறைவர் அவர் போலாம்
    அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே 

விளக்கம்:

பெருக்க=மிகவும் அதிகமாக; பிதற்றும்=சாரமற்ற சொற்களைப் பேசும்; கரக்கும்=உண்மையை மறைத்து பேசும்; அருப்பின் முலையாள்=அரும்பு போன்று மேன்மை வாய்ந்த மார்பகங்கள்;' இருக்கின் மலிந்த=இருக்கு முதலான நான்கு வேதங்களில் நிறைந்துள்ள;

பொழிப்புரை:

மிகவும் அதிகமாக சாரமற்ற சொற்களைப் பேசும் சமணர்களும், உண்மையை மறைத்துப் பேசும் புத்தரின் சொற்களையும், சீர்காழியில் வீற்றிருக்கும் பெருமான் ஒரு பொருட்டாக  கருதாமல் நீக்குகின்றார்; இருக்கு முதலாகிய நான்கு வேதங்களில் நிறைந்துள்ள பெருமான், அரும்பு போன்று மென்மையான மார்பகங்களை கொண்டுள்ள உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.