பாடல் 7:
தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத்
தோன்றி அருள வல்லானும்
கழற்கு அங்கை பன்மலர் கொண்டு காதல்
கனன்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச்
சடைக் கரந்தானும்
அழற்கு அங்கை ஏந்த வல்லானும் ஆரூர்
அமர்ந்த அம்மானே
விளக்கம்:
துன்னுதல்=நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொள்ளுதல்: தங்களுக்கு இறைவனை கைகளைக் கொடுத்தது அவனைத் தொழுவதற்காகத் தான் என்ற எண்ணத்தில் எப்போதும் இறைவனைத் தொழுதவாறு இருக்கும் அடியார்கள்: கனன்று=மிகவும் அதிகமாக பொங்கி எழுந்து
பொழிப்புரை:
தங்களது அழகிய உள்ளங்கைகளை நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொண்டு, தன்னைத் தொழும் அடியார்களுக்கு அவர்களது கண் முன்னே தோன்றி அருள் புரிபவன் சிவபெருமான்: தனது திருவடிகளில் தூவுவதற்காக தங்களின் அழகிய கைகளில் பல விதமான மலர்களை உடைய அடியார்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருப்பவன் சிவபெருமான்: கூந்தலை உடைய கங்கையைத் தனது அழகிய சடையின் உள்ளே மறைத்து வைத்தவனும், தீயினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆட வல்லானும், ஆரூர் நகரத்தில் அமர்ந்துள்ள அம்மான் ஆவான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


