பாடல் 10:
வெற்றரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார்
அவர்கள் உரை கொள்ளன்மின்
மற்றவர் உலகின் அவலம் அவை
அறுக்க கில்லார்
கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால்
கழல் சேவடி கைதொழ
உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே
விளக்கம்:
வெற்று அரை=ஆடையில்லாத இடுப்பு; உலகின் அவலம் என்று பிறப்பிறப்புச் சுழற்சியினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உறுதி=ஆன்ம இலாபம், உயிருக்கு உண்மையான இன்பம் அளிக்கும் வீடுபேறு நிலை.
பொழிப்புரை:
உலகத்தவரே, ஆடையிலாத இடுப்பினை உடைய சமணர்களும் துவராடையினை அணியும் புத்தர்களும் பெருமானை இழித்துச் சொல்லும் பேச்சுகளை ஒரு பொருட்டாக கொள்ளாதீர்; அவர்கள் இருவரும் பிறப்பிறப்புச் சுழற்சியில் அழுந்திய உயிர்கள் உலகத்தினில் படும் துயரங்களை மாற்றும் வழி அறியாதவர்கள். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை அறிந்த கற்றவர்கள் தொழுது வணங்கும் சிற்றம்பலத்தில் நடமாடும் இறைவன் பால் மிகுந்த அன்பு கொண்டு, அவனது திருப்பாதங்களை வணங்கும் அடியார்கள், உயிருக்கு நிலையான என்றும் அழியாத இன்பம் தரும் வீடுபேற்றினை அடைவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு

சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர்

கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


