ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

95. காரைகள் கூகை முல்லை - பாடல் 8

கயிலை மலையை

News image
Updated On :18 மே 2018, 9:12 pm


பாடல் 8:

    வலமிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா
         அரக்கன் வலியோடு
    உலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான்
          உகந்த நகர் தான்
    நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என
        நின்ற நீதி அதனை
    நலமிகு தொண்டர் நாளும் அடி பரவல் செய்யும்
        நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

வாளன்=வாளினை உடையவன்; உலம்=கற்றூண்; நலமிகு கீழுமேலும்=நலமுடைய கீழ் ஏழ் மற்றும் மேலேழ் உலகங்கள்; வலமிகு வாளன் வேலன் என்ற தொடரினை அரக்கன் என்பதுடன் கூட்டி. வலிமை மிகுந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடைய அரக்கன் இராவணன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. 

பொழிப்புரை: 

வலிமை மிகுந்தவனும், சிறந்த வாள் வேல் ஆகிய ஆயுதங்களை உடையவனும் ஆகிய  பெருமான், வளைந்த வாள் போன்று நீண்ட பற்களை உடைய அரக்கன் இராவணன், கயிலை மலையை மதியாது அதனைப் பேர்த்து எடுக்கத் துணிந்த போது, அரக்கனது கற்றூண் போன்று வலிமையான தோள்களும் வலிமை இழக்கும் வண்ணம் தனது விரலை மலையின் மீது ஊன்றி அரக்கனை மலையின் கீழே அழுத்தினான். அத்தகைய வல்லமை வாய்ந்த பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் நகரம் தான் நனிபள்ளி. நலங்கள் பல உடைய கீழேழ் மற்றும் மேலேழ் உலகங்களிலும் தனக்கு நிகராக எவரும் இல்லாதவனாக திகழும் சிவபெருமானை, நீதியின் வடிவமாக திகழும் பெருமானை வணங்கி அவனது திருவடிகளைப் போற்றி புகழும் அடியார்கள் நிறைந்த தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.