பாடல் 10:
போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவு வெண்காடு மேவிய
ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே
விளக்கம்:
போதியர்=போதி மரத்தை வழிபடும் புத்தர்கள்; பிண்டியர்கள்=அசோக மரத்தினை வழிபடும் சமணர்கள்; பெருமானின் தன்மைகளை பெருமைகளை குறிப்பிடும் உண்மையான சொற்களை சொல்லாமல் இருக்கும் புத்தர்கள் மற்றும் சமணர்கள் மீது இரக்கம் கொண்டு, நல்வாழ்க்கை அமையாதவர்கள் என்று சம்பந்தர் இங்கே கூறுவதாக உரையாசிரியர்கள் விளக்கம் கூறுகின்றனர். பொருத்தம்=பொருத்தமான நல்வாழ்கை;
பொழிப்புரை:
போதி மரத்தினை வழிபடும் புத்தர்களும் அசோக மரத்தினை வழிபடும் சமணர்ளும், பொருத்தமான நல்வாழ்க்கை இல்லாதவராக, பெருமானின் இயல்புகள் பெருமைகளை உணர்த்தும் உண்மையான சொற்களை பேசுவதையும்
நினைப்பதையும் செய்யாமல் இருக்கின்றனர். வேதம் ஓதிய அந்தணர்கள் புகழ்ந்து பாடி துதிக்க திருவெண்காடு தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை, அனைவர்க்கும் ஆதியாக விளங்கும் பெருமானை தொழும் அடியார்களுக்கு துன்பம்இல்லையாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


