ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 4

மலர் சோலைகள்

News image
Updated On :2 நவம்பர் 2018, 9:55 am

பாடல் 4:


    நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
    பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை
    சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய
    இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே

விளக்கம்:

மாட வீதிகள் என்று தில்லைச் சிதம்பரத்தின் வீதிகளில் பெண்கள் ஆடிய பந்தாட்டத்தை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அந்த வீதிகளில் இருந்த நெடிதுயர்ந்த வீடுகளை குறிப்பிடுகின்றார்.; அறை=ஒலி தொடர்ந்து வண்டுகள் ரீங்காரம் செய்யும் வண்ணம் மலர் சோலைகள் நிறைந்த ஊர் என்று உணர்த்தப் படுகின்றது. நெற்றி=உச்சி, இங்கே ஆகாயம் என்ற பொருளில் வருகின்றது. 

பொன்னம்பலம் என்பது ஆடல்வல்லான் அபிஷேகம் செய்யப்படும் இடம். கொடிமரத்திற்கு அருகில் உள்ள நிருத்த சபை ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்; ஆயிரம் கால் மண்டபம் இராஜ சபை என்று அழைக்கப் படுகின்றது; சிற்றம்பலத்திற்கு அருகில் உள்ள தேவசபையினை பேரம்பலம் என்று அழைப்பார்கள். இங்கே தான் உற்சவ மூர்த்திகளின் உருவச் சிலைகள் வைத்து பாதுகாக்கப் படுகின்றது. சிற்றம்பலம் என்பது பெருமான் நடனம் ஆடும் இடம். 

பொழிப்புரை:

தில்லைச் சிதம்பரத்தின் உயர்ந்த வீட்டு மாடங்களில் நிறைந்துள்ள உயர்ந்த வெண் கொடிகள், ஆகாயத்தினை நேராக தீண்ட, வானில் உலவும் பிறைச் சந்திரனும் அந்த கொடிகளை தொட்டு தாக்குகின்றது. இந்த நகரத்தில், வண்டுகள் தொடர்ந்து ரீங்காரம் வண்ணம் சோலைகள் நிறைந்த நகரத்தில் உள்ள பேரம்பலத்தின் அருகே அமைந்துள்ள  சிற்றம்பலத்தில் பொருந்தி நடமாடும் பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை பாடுவதே நிறைந்த இன்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.