பாடல் 5:
வளம் கிளர் மதியமும் பொன் மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல் கபாலியார் தாம்
துளங்கு நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விளங்கு நீர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
களம் கொள்=இருக்கும் இடம்; விளங்குநீர் துருத்தி என்ற தொடர், ஆற்றின் இடையே இந்த தலம் ;பண்டைய நாளில் அமைந்திருந்ததை உணர்த்துகின்றது. வளம்=அழகு; கிளர்-திகழ்; துளங்கும்=அசையும்;
பொழிப்புரை:
அழகுடன் திகழும் பிறைச் சந்திரனும் பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரையும் ஒளியுடன் திகழும் பாம்பையும், தனது சடையின் இடையே இடம்பெற்று இருக்கும் வண்ணம் வைத்துள்ள எமது பெருமான், தனது நெற்றியில் ஒரு கண் உடையவர் ஆவார். தனது கையினில் கபாலம் ஏந்திய தோற்றத்துடன் இருப்பவரும் தனது மார்பினில் பொலிந்து அசையும் வண்ணம் பூணூல் அணிந்தவரும் ஆகிய பெருமான், உமை அன்னையுடன் இணைந்து பகற்போதினில் அமரும் இடம் திருத்துருத்தி எனப்படும் தலமாகும் அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


