பாடல் 7:
புரிதரு சடையினர் புலியுரி அரையினர் பொடி அணிந்து
திரிதரு இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
புரிதரு சடை=முறுக்கிய சடை; பொடி=திருநீறு; வரிதரு=வரிகளாக பூசப்பட்ட சந்தனக் கீற்றுகள்; வனமுலை= அழகிய மார்பகங்கள்;
பொழிப்புரை:
முறுக்கிய சடையை உடையவரும், புலித்தோலினை ஆடையாகத் தனது இடுப்பினில் அணிந்தவரும், உடலெங்கும் திருநீறு பூசியவராக உலகெங்கும் திரிந்து பலி ஏற்பவரும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினால் வளைத்து எரித்தவரும் ஆகிய பெருமான், வரிவரியாக தனது அழகிய மார்பகங்களில் சந்தனக் கீற்று பூசிய பார்வதி தேவியுடன் பகற்பொழுதினில் உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


