பாடல் 9:
கரைகடல் அரவணைக் கடவுளும் தாமரை நான்முகனும்
குரை கழல் அடி தொழக் கூரெரி என நிறம் கொண்ட பிரான்
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
கரைகடல்=ஒலிக்கும் கடல்; அரவணைக் கடவுள்=பாம்பினை படுக்கையாகக் கொண்டுள்ள திருமால்; குரை கழல்=ஒழிக்கும் கழல்; கெழு=வளர்ந்த; கூரெரி-நீண்ட தீப்பிழம்பு; நிறம் என்ற சொல் இங்கே வடிவத்தை குறிப்பிடுகின்றது.
பொழிப்புரை:
ஒலிக்கும் அலைகள் கொண்ட பாற்கடலினில் பாம்பினைப் படுக்கையாகக் கொண்டு உறங்கும் கடவுளாகிய திருமாலும் தாமரை மலரினில் உறையும் நான்முகனும் பெருமானின் அடியையும் முடியையும் காணமுடியாமல் தவித்து, ஒலிக்கும் கழல்கள் அணிந்த பெருமானின் திருவடிகளைத் தொழுது இறைஞ்சிய போது, நீண்ட தீப்பிழம்பாக அவர்கள் இருவருக்கும் தோற்றம் அளித்தவன் சிவபெருமான். மலைச்சாரலில் வளர்ந்த பார்வதி தேவியுடன் பகற்பொழுதினில் சென்றடைந்து பெருமான் உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


