உலகம்: ஜனவரி-ஏப்ரல்
ஜனவரி12\01: ஷேக் ஹசீனா வங்கதேசப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமரானார்.

ஜனவரி
12 \01: ஷேக் ஹசீனா வங்கதேசப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அவர் மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமரானார்.
15\01 : இராக்கில் தொடர் குண்டு வெடிப்பில் 73 பேர் பலியானார்கள்.
பிப்ரவரி

10\02 : நேபாளத்தில் நீண்ட கால அரசியல் குழப்பத்துக்குப் பிறகு, சுஷீல் கொய்ராலா (74) பிரதமராகப் பொறுப்பேற்பு. முன்னதாக, 16 ஆண்டுகள் அரசியலை விட்டு விலகி, இந்தியாவில் வாழ்ந்து வந்தார்.
11\02: அல்ஜீரிய ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பாதுகாப்புப் படை விமானம் நொறுங்கி விழுந்து 77 வீரர்கள் பலியாகினர். பலியானோர் எண்ணிக்கை 103 என்று அல்ஜீரிய ஊடகங்கள் தெரிவித்தன.

18\02 : உக்ரைன் தலைநகர் கீவில் காவல் துறையினருக்கும் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். இரண்டு நாள்களாக நடந்து வந்த மோதலில் மொத்தம் 77 பேர் உயிரிழந்தனர்.
20\02: ஆப்கானிஸ்தானையொட்டிய வடக்கு எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர்.

25\02: நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 43 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
மார்ச்

1\03: உக்ரைன் நாட்டுக்குள் ரஷியப் படைகளை அனுப்ப ரஷிய அதிபருக்கு நாடாளுமன்றம் அதிகாரம் அளித்தது. உக்ரைன் கூட்டாட்சியின் கீழ் இருந்த கிரீமியா பகுதி முற்றிலும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

1\03 : சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குன்மிங் ரயில் நிலையத்துக்கு கத்திகளுடன் வந்த சில நபர்கள், அங்கிருந்த பயணிகளைத் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர். 107 பேர் காயமடைந்தனர்.
3\03 : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நீதிமன்ற வளாகத்தில் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில், நீதிபதி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.

08\03கடந்த மார்ச் 8 ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் 370 என்ற ஜெட் விமானம், சீனாவின் பீஜிங் நகருக்கு சென்ற போது மாயமானது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை அந்த விமானத்தை பற்றி எந்த தகவலும் இல்லை.
17\03: உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்து, கிரீமியா தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. பெரும்பாலான மக்கள் ஒப்புதல் அளித்ததையடுத்து, ரஷியாவுடன் இணைவதாக அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் யூனியன் பல்வேறு நாடுகளாகப் பிரிந்தபோது, கிரீமியா பகுதி உக்ரைனுடன் சேர்க்கப்பட்டது. இப்போது மீண்டும் ரஷியாவில் இணைந்துள்ளது.
24\03: எகிப்தில் அதிபர் மோர்ஸி பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, காவலர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏப்ரல்
14\04: நைஜீரியாவின் அபுஜா நகர் பேருந்து நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 71 பேர் பலியாகினர். 2 ஆண்டுகள் கழித்து இந்த நகரில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மிகக் கொடூரமான தாக்குதல் இது.

16\04: பெரும்பாலும் பள்ளி மாணவர்களை ஏற்றி, "ஜேஜு' என்ற சுற்றுலாத் தீவு நோக்கிச் சென்ற தென் கொரிய படகு, 462 பேருடன் நடுக்கடலில் கவிழ்ந்தது. அதில் 304 பேர் உயிரிழந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

