அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

செப்டம்பர்-டிசம்பர் வரை

இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. முதல் முயற்சியிலேயே..

Updated On :

செப்டம்பர்


1/9: இந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.


4/9: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 284 பேர் உயிரிழந்தனர்.


5/9: இந்திய அணு மின் நிலையங்களுக்கு யுரேனியம் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய நாட்டுடன் இந்தியா மேற்கொண்டது.

7/9: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை விமானம் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டார். அந்த மாநிலத்துக்கு ரூ. 1000 கோடி உடனடி நிவாரணத் தொகையை அறிவித்தார்.


23/9: அஸ்ஸாம், மேகாலயம் மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 85 பேர் உயிரிழந்தனர்.


24/9: இந்தியாவின் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்தது.


25/9: "இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.

26/9: மகாராஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் விலக்கி கொண்டதையடுத்து, அந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவாண் பதவியை ராஜிநாமா செய்தார்.

அக்டோபர்

Story image


3/10: பிகார் மாநிலம், பாட்னாவில் தசரா திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர்.

12/10: வடக்கு கடலோர ஆந்திரப் பகுதிகளை மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் தாக்கிய ஹூட்ஹூட் புயலுக்கு 46 பேர் பலியாகினர். இந்தப் புயலால் விசாகப்பட்டினம் நகரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.


16/10: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1சி என்ற வழிகாட்டி (நேவிகேஷன்) செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


26/10: கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஹரியாணாவில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக அரசின் முதல்வராக மனோகர் லால் கட்டார் பதவியேற்றார்.


27/10: தொழிலதிபர்கள் பிரதீப் பர்மன், ராதா எஸ்.திம்ப்லோ, பங்கஜ் சிமன்லால் லோதியா ஆகியோர் வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நவம்பர்

Story image


8/11: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த லட்சுமிகாந்த் பார்சேகர், கோவாவில் பாஜக அரசின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


9/11: தில்லியில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றது. 4 அமைச்சர்கள், 14 இணையமைச்சர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

11/11: சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் அருகே அரசு மருத்துவ முகாம்களில் இலவச குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொண்ட பெண்களில் 11 பேர் உயிரிழந்தனர்.


13/11: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், மாச்சில் பகுதியில் நடந்த போலி என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய ராணுவ வீரர்கள், அதிகாரிகள் 5 பேருக்கு, ராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது.


13/11: உணவுப் பாதுகாப்பு விவகாரத்தில் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்தது.


14/11: மத்திய அரசின் கேந்த்ரிய வித்யாலயப் பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடமாக உள்ள "ஜெர்மன்' நீக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

டிசம்பர்

Story image


1/12: சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 14 பேர் பலியாகினர்.


2/12: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்ததினமான டிசம்பர் 25-ஆம் தேதி, "நல்லாட்சி தின'மாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


4/12: முந்தைய ஜனதா கட்சியில் இடம்பெற்றிருந்த சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 6 கட்சிகளை ஒன்றிணைக்க முடிவு செய்துள்ளதாக இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.


5/12: பஞ்சாப் மாநிலம், குமன் கிராமத்தில், தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 60 பேரின் பார்வை பறிபோனது.


10/12: தற்கொலை முயற்சியை குற்ற நடவடிக்கையாகக் கருதி தண்டனை விதிக்கும் 309-ஆவது சட்டப் பிரிவை இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து நீக்க உள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்தது.


11/12: தில்லியில் நடந்த இந்திய-ரஷிய உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் முன்னிலையில், இருநாடுகளுக்கும் இடையே, பாதுகாப்பு, அணு மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


12/12: சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சி.பி.ஐ. கைது செய்தது.


12/12: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


13/12: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, இந்த அமைப்பின் சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தை கையாண்டு வந்த, மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்ற இளைஞரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர்.

21/12: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சிருஞ்சய் போûஸ சிபிஐ கைது செய்தது.


23/12: அசாமில் நான்கு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பெண்கள் உள்பட 34 பேர்
 உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.