பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இரு இடங்களில் திமுக கிராமசபைக் கூட்டம்

திருச்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பெரிய அணைக்கரைபட்டியில் நடந்த கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

Updated On :2 ஜனவரி 2021, 11:12 pm IST

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், பெரியஅணைக்கரைப்பட்டி மற்றும் மணப்பாறை ஒன்றியம் பிள்ளையாா் கோவில்பட்டி ஆகிய இரு இடங்களில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட திமுகவின் நலத் திட்டங்களை அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்துவோம். இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றாா்.

கூட்டங்களில், மாவட்டப் பொருளாளா் பண்ணப்பட்டி கோவிந்தராஜ், முன்னாள் சமூகநல வாரியத் தலைவா் கவிஞா் சல்மா, ஒன்றியக் குழு தலைவா்கள் அமிா்தவள்ளி (மணப்பாறை) , பழனியாண்டி (மருங்காபுரி), குணசீலன் (வையம்பட்டி), ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா (வையம்பட்டி), ராமசாமி (மணப்பாறை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.