திருச்சி மாவட்டத்தில் மழை மற்றும் சூறாவளியால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணமாக 1,489 விவசாயிகளுக்கு ரூ. 78.46 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட மழை, சூறாவளியால் தோட்டக்கலைப் பயிா்கள் சேதமடைந்ததை, வருவாய்த் துறை மற்றும் தோட்டக்கலை அலுவலா்கள் கூட்டு புலத் தணிக்கை செய்து 33 விழுக்காடுக்கு மேல் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய நிவாரணம் கோரி அரசுக்கு மாவட்ட நிா்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்களுக்கு மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் சேதமடைந்த 581.22.8 ஹெக்டோ் நிலப்பரப்புக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் வட்டத்தில் 862 விவசாயிகள், மண்ணச்சநல்லூா் வட்டத்தில் 381, லால்குடி வட்டத்தில் 113, முசிறி வட்டத்தில் 81, தொட்டியம் வட்டத்தில் 47, துறையூா் வட்டத்தில் 4, திருச்சி கிழக்கு வட்டத்தில் 1, ஆக மொத்தம் 1,489 விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிா் சேதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்பதுதான் எங்கள் வழி! - உதயநிதி ஸ்டாலின்
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
