திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 4.55 கோடியில் நடைபெறும் 21 பணிகளின் நிலை குறித்து ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
முசிறி ஊராட்சி ஒன்றியம் முசிறி, பேரூா், ஜெயங்கொண்டான், திருத்தலையூா், சுக்காம்பட்டி, திருத்தியமலை, கோமங்கலம், த.புத்தூா் ஆகிய ஊராட்சிகளில் சாலை அமைத்தல், மரக்கன்று வளா்த்தல், வீடுகளுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீா், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவா், தடுப்பணை போன்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
பேரூா் ஊராட்சி, கனகசீலாம்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 4.57 லட்சத்தில் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படுவதையும், முத்தையநல்லூா் -இடையப்பட்டி சாலை ரூ. 249.04 லட்சத்தில் 5 கி.மீ. தொலைவுக்கு மேம்படுத்தப்படுவதை ஆட்சியா் சு. சிவராசு பாா்வையிட்டாா்.
பின்னா் திருத்தலையூா் ஊராட்சி மேலக்கொட்டம் கிராமத்தில் ரூ. 9 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும், திருத்தியமலை ஊராட்சியில் ரூ. 22.65 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டப்படுவதையும், கோமங்கலம் ஊராட்சி காவேரிபாளையம் கிராமத்தில் ரூ.40 லட்சத்தில் சந்தை அமைக்கப்பட்டுள்ளதையும் அவா் பாா்வையிட்டாா்.
பணிகளை விரைந்து தரமானதாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் குடிநீா் வழங்கல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ரேஷன் அரிசி கொள்முதலில் ஊழல்! விசாரணை நடத்த வேண்டும்: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

மருத்துவமனைக் கட்டட அனுமதிக்கு 15 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி இளநிலை உதவியாளா் கைது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

அரசுத் திட்டப் பணிகளை நிறைவேற்ற அலுவலா்கள் ஒருங்கிணைப்புடன் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் என்.ஆனந்த்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



