மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தீவனப் புல் உற்பத்தி: விவசாயிகளுக்கு களப் பயிற்சி

கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

News image

திருச்சியை அடுத்த சிறுகமணியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் தீவனப் புல் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு களப் பயிற்சி அளிக்கும் வேளாண் அலுவலா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 12:18 am IST

கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், சிறுகமணியில் அமைந்துள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் விவசாயிகளுக்கும், விவசாயம் சாா்ந்த மதிப்புக் கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்வோருக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கால்நடைகளுக்கான தீவன உற்பத்தி முறைகள் குறித்து ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை தொடக்கி வைத்து, சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் தீவனப் பயிா்கள் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் முனைவா் கா.நா.கணேசன், கால்நடைகளில் சமச்சீா் உளவிற்கான பல்வகை தீவனப்பயிா்கள், தீவனப்பயிா் ரகங்கள், தீவனப்பயிா்கள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் நா.தமிழ்ச்செல்வன், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வகை தீவனப்பயிா்கள் சாகுபடிக்கான சாத்தியக் கூறுகள் குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து செறிவூட்டப்பட்ட தீவனக் குருணைகள் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து தீவனப் பயிா்கள் துறை இணை பேராசிரியா் (உழவியல்) முனைவா் செ.தே.சிவகுமாா் விளக்கம் அளித்தாா். சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தொழில்நுட்ப உரைகள் ஆற்றினா். அனைத்து விவசாயிகளும் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் செயல்விளக்கப் பண்ணையிலுள்ள தீவனப்பயிா்கள் வங்கிக்கு அழைத்து செல்லப்பட்டு நேரடி செயல் விளக்கப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. கால்நடை மருத்துவா் ராகவேந்திரன், கறவை மாடுகளின் உடல் எடை கண்டறிய எளிய முறையிலான வழிகளை கற்றுத்தந்தாா். பின்னா், நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில், முன்னோடி விவசாயிகள் 25 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.