தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பொங்கல் பண்டிகை: ஜன. 11 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஜன. 11ஆம் தேதி முதல் திருச்சி மண்டலத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Updated On :9 ஜனவரி 2021, 12:24 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஜன. 11ஆம் தேதி முதல் திருச்சி மண்டலத்தில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதில், சென்று வர வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னாா்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூா், ஜெயங்கொண்டம், கரூா், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்கு ஜன.11ஆம் தேதி முதல் 13ஆம்தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூா், கும்பகோணம், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூா், மதுரை ஆகிய ஊா்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மதுரை, கோவை, திருப்பூரிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா் பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல், திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.