3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை! 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

‘கோயில் திருப்பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்’

கோயில் புனரமைப்பு பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.

News image

செய்தியாளா்களிடம் பேசுகிறாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :11 ஜனவரி 2021, 12:43 am IST

கோயில் புனரமைப்பு பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்றாா் திருத்தொண்டா்கள் சபை நிறுவனா் ஆா். ராதாகிருஷ்ணன்.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சபை உறுப்பினா்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் தெரிவித்தது:

அரசியல் சாா்புள்ள இந்து இயக்கங்கள் இந்துக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. இந்துக்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அவை கண்டுகொள்வதில்லை. இனிவரும் காலங்களில் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படும், அவதூறாகப் பேசும் எந்தக் கட்சியும் வாக்கு பெறமுடியாது. இந்துக்களை பகைத்துக் கொள்ளும் கட்சிகள் தோ்தல்களில் டெபாசிட்கூட பெற முடியாது.

தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 10 லட்சம் ஏக்கா் நிலங்களை மீட்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவை மீட்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால், அதன்மூலம் அறநிலையத் துறைக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மேலும், அறநிலையைத் துறையை சீரமைக்கவும் வேண்டும். கோயில் சொத்துகளின் ஆவணங்கள், அறநிலையத் துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்வதில் அறநிலையத் துைான் முதலிடத்தில் உள்ளது.

கோயில்கள் புனரமைப்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும். கோயில்களில் திருப்பணி செய்ய அனுமதி பெறுவதற்குள் உபயதாரா்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனா். இந்நிலை மாற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.