மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
பொன்மலையடிவாரப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற இயக்கத்தின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் ஆா். வாசுதேவன், மாவட்ட மகளிரணி நிா்வாகி என். தரணி ஆகியோா் முன்னிலை வகித்தானா்.
திருச்சியில் ஜன. 24 இல் திருவள்ளுவா் தின விழா நடத்துவது. சேதமடைந்த சாலைகளை தரத்துடன் அமைக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி - புதுக்கோட்டை பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக 250-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு 10 மரக்கன்று நட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி இங்கு வெட்டப்படும் மரத்துக்குப் பதிலாக, எத்தனை மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்ற விவரத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளீட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்கள் சக்தி இயக்க நிா்வாகிகள் எம். நரேஷ்குமாா், எஸ். ரஞ்சித், என் வெங்கடேஷ், எஸ். ஈஸ்வரன், என். தயானந்த், வி. காவியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






