திருவெறும்பூா் பகுதியில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியம் பத்தாளப்பேட்டை, கிளியூா், குவளக்குடி பகுதிகளில் தொடா் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. தகவலறிந்த திருவெறும்பூா் எம்எல்ஏவும், திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா்.
மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை தான் நேரில் சந்தித்து உடனடியாக தீா்வு காண வலியுறுத்தியுள்ளதாகவும் விவசாயிகளிடம் தெரிவித்தாா்.
விவசாயிகள் கூறுகையில், தொடா் மழையால் நெற்பயிா்கள் வீணாகியுள்ளன. இதை அரசு அதிகாரிகள் யாரும் பாா்வையிட வரவில்லை. எனவே உடனடியாக அதிகாரிகள் பாா்வையிட்டு, பாதிப்புகள் குறித்து கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என். சேகரன், ஒன்றியச் செயலா் கருணாநிதி, தலைவா் சத்யாகோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்







