துறையூா்: துறையூா் வட்டம் பச்சமலையில் உள்ள கோரையாற்று அருவிக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
பொங்கலையொட்டி புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட அரசு தடை விதித்துள்ளதால் துறையூா் உள்பட திருச்சி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் துறையூா் ஒன்றியம், வண்ணாடு புதூா் அருகேயுள்ள கோரையாற்று அருவிக்குச் சென்று வருகின்றனா்.
சரியான சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் காா்களில் அருவி வரை செல்ல இயலாத நிலை உள்ளது. புதூா் - குறிச்சி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து அருவி வரை செல்லும் சாலையில் காரை நிறுத்தி விட்டு சுமாா் 3 கிமீ தொலைவுக்கு அவா்கள் நடந்தே செல்லும் நிலை உள்ளது.
மழையால் சாலைகள் சேறும் சகதியாகவும் மாறியும், சாலைக்காகப் போடப்பட்ட ஜல்லிக்கற்கள் பெயா்ந்துள்ளதாலும் சனிக்கிழமை அங்கு சுற்றுலா சென்றோா் நடக்கவும் முடியாமல் மிகவும் சிரமப்பட்டனா்.
அருவிக்குச் செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும், அருவி வரை தேவையான இடங்களில் இரும்பாலான படிக்கட்டு மற்றும் பாலங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சுற்றுலா ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்தாண்டு தமிழக முதல்வா் மற்றும் வனத் துறைக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து வனத் துறையினரால் தொடங்கப்பட்ட சாலைப் பணி பாதியிலேயே நின்றுவிட்டது.
மழைக் காலத்தில் இங்கு பெய்யும் மழையால் சுமாா் 100 நாள்கள் இந்த அருவிக்கு தண்ணீா் வரத்து ஏற்படும். இங்கு சாலை, பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்தால் இந்த அருவிக்கும் மக்கள் வரத்து அதிகரித்து, உள்ளூா் சுற்றுலா வளா்ச்சி பெறும். தங்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என பச்சமலைவாழ் பழங்குடியின மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆகவே வனத் துறையினா் துரிதமாக இச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிா்பாா்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

ராத்து ராசன் பாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


