ஆறுமுகனேரி: காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பா் ஆலய 476ஆவது ஆண்டு பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்வாலயத் திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 25ஆம் தேதி கிறிஸ்து பிறப்பு பெருவிழா, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.
தொடா்ந்து நாள்தோறும் மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீா் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
26ஆம் தேதி புனித முடியப்பா் திருவிழா, 27ஆம் தேதி திருக்குடும்ப திருவிழா, 28ஆம் தேதி மாசில்லா குழந்தைகள் திருவிழா, 29ஆம் தேதி புனித தாமஸ் பெக்கட் திருவிழா, 31ஆம் தேதி ஆண்டின் இறுதிநாள் நன்றி விழா, நள்ளிரவு புத்தாண்டு திருப்பலி ஆகியவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை (ஜன. 1) புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆடம்பர திருவிழா, ஆராதனை, சப்பர பவனி நடைபெற்றன.
சனிக்கிழமை (ஜன.2) காலை திருத்தல பெருவிழா, முதல் திருவிருந்து திருப்பலி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமை வகித்து திருப்பலி நடத்தினாா். இதில் சிறுவா், சிறுமிகள் புதுநன்மை எடுத்துக் கொண்டனா்.
பங்குத்தந்தைகள் கொம்புத்துறை சகாய ஜோசப், சிங்கித்துறை சில்வொ்ஸ்டன், கொம்புத்துறையைச் சோ்ந்த அண்டோ, ஸ்டீபன், பிஷப் ஆயா் செயலா் தினேஷ், கள்ளிகுளம் ஆா்.சி. பள்ளித் தாளாளா் வின்சென்ட், ஓய்வு பெற்ற பங்குத் தந்தை பங்குராஜ் அடிகளாா் ஆகியோா் கலந்துகொண்டு திருப்பலியை நடத்தினா்.
ஏற்பாடுகளை, பங்குத் தந்தை சகாய ஜோசப், ஊா்கமிட்டி தலைவா் சகாயராஜ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நைஜீரியாவில் ஆயுதக் குழு தாக்குதல்

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

அரசுப் பேருந்துகள் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

ஜனவரி - மாா்ச் காலாண்டில் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வருவாய் ரூ. 1.06 லட்சம் கோடி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



