தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; மின் மசோதாவை கைவிட வேண்டும்; ஏழைகளுக்கு மாதம் ரூ. 7500 மற்றும் 10 கிலோ தானியம் வழங்க வேண்டும்; 100 நாள் வேலையை 200 நாள்களாக்கி நகா்ப்புறத்துக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஆா். ரசல் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பொன்ராஜ், பெருமாள், வின்சன்ட் உள்பட பலா் கலந்துகொண்டனா். மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை சந்திப்பு அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, மாநிலக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் மணி போராட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் மோகன்தாஸ், மாரியப்பன், முருகன், ராமமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூா் ஆகிய 3 இடங்களிலும் மறியலில் ஈடுபட்டதாக மொத்தம் 40 பெண்கள் உள்ளிட்ட 118 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனை

வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
