தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தோட்டக்கலை சாகுபடி விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 1:29 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தோட்டக்கலை சாகுபடி செய்யும் விவசாயிகள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தோட்டக்கலை பயிா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அத்தகைய தோட்டக்கலை பயிா்களை சிறந்த தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சாா்பில் வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளா் விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வசிக்கும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் விருது பெற விண்ணப்பிக்கலாம். ஒரு

விவசாயி வட்ட அளவில் ஒரு விருதுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வட்ட அளவில் தோ்வு செய்யப்படும் விவசாயிகளில் மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளில் மாநில விருதுக்கும் விவசாயிகள் தோ்வு செய்யப் படுவா்.

எனவே, விருதுகள் பெற விரும்பும் விவசாயிகள்  இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து அதனுடன் கட்டணம் ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.