காதலர்களின் இறுதி இடமாகும் கொடைக்கானல் தற்கொலைப் பாறை

காதலர்கள், தங்கள் காதல் நிறைவேறாமல்போனால் கொடைக்கானலிலுள்ள தற்கொலைப் பாறைக்கு வந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர். 
கொடைக்கானல் தற்கொலைப் பாறை பகுதி
கொடைக்கானல் தற்கொலைப் பாறை பகுதி
Updated on
2 min read

கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும், சுற்றுலாத் தலங்களும் ஏராளமாக உள்ளன. இதனால்தான் தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மற்றும் உலகமெங்கிலும் உள்ள பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். 

வாழ்க்கையில் காதல் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இதனால்தான் அதற்காக ஒரு தினத்தையே உருவாக்கியுள்ளனர்.

காதலர்கள் பெரும்பாலும் வரக் கூடிய முதல் இடம் கொடைக்கானல். அவர்கள் அமைதியைத் தேடி இயற்கை அழகை ரசித்தும், நீண்ட நேரம் மகிழ்ச்சியுடன் உலா வருகின்றனர்.

பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், தற்கொலைப் பாறை (பசுமைப் பள்ளத்தாக்கு), செட்டியார் பூங்கா, அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை சினிமாவிலும் காதலர்கள் டூயட் பாடல் பாடிய காட்சியையும் படம் பிடித்து வெளியிடுகின்றனர்.

காதலர்கள் தங்களது காதல் நிறைவேறினால் திருமணம் செய்து கொள்கின்றனர். காதல் நிறைவேறாமல் போனால் கொடைக்கானலிலுள்ள தற்கொலைப் பாறைக்கு வந்து தற்கொலை செய்துகொள்கின்றனர்.

தமிழகம் மட்டுமல்ல கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காதலர்கள் இந்த இடத்திற்கு வந்து தங்களது இறுதிக்கட்ட வாழ்வை முடித்துக் கொள்வதால் இந்த இடத்திற்கு தற்கொலைப் பாறை எனப் பெயர் வந்தது. ஆழமான பள்ளத்தாக்கு, புல்வெளிகள், வன விலங்குகள் வசிக்கும் பகுதி ஆயிரக்கணக்கான அடி பள்ளமாக காணப்படுவதால் தற்போது பசுமைப் பள்ளத்தாக்கு என பெயரிட்டுள்ளனர்.

தற்கொலைகள் அதிகமாக நடைபெற்று வந்ததால் நகராட்சி நிர்வாகம் இந்தப் பகுதியில் தடுப்புக் கம்பியும், தடுப்புச் சுவரும் அமைத்துள்ளது. 

மேலும் சிறு வியாபாரிகள் இங்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் யாரும் உள்ளே செல்ல முடியாது. இது போன்ற பல கட்டுப்பாடுகள் இருப்பதால் தற்போது "தற்கொலைப்"பாறையில் காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது பெரிதும் குறைந்துள்ளது.

இந்த தற்கொலைப் பாறை (சூசைட் பாயிண்ட்) பகுதியில் பல சினிமா படத்தில் காதலர்கள் இந்தப் இடத்திற்கு வந்துதான் தற்கொலை செய்வது போல காட்சி அமைப்பார்கள். அதைப் பார்த்த பல காதலர்கள் அதே போல தற்கொலைப் பாறைக்கு வந்து "தற்கொலை" செய்கிறார்கள், காதலர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையில் விரக்தியடைந்த பலரும் தங்களது வாழ்க்கையை இந்த இடத்தில் முடித்துள்ளனர்.

காதலுடன் வாழ்கிறது கொடைக்கானலில் தற்கொலைப் பாறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com