5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

கங்கை வழிபட்ட நாதர்!

மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது

News image
Updated On :21 மார்ச் 2013, 6:02 pm IST

மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது இக்கோயில்.சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு மகரிஷிகளில் முதன்மையானவர் கன்வமகரிஷி.

"மக்கள் அனைவரும் காசியில், கங்கை நதியான என்னில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். அந்தப் பாவங்கள் என் மீது அமர்ந்துவிடுகின்றன. அவை தீர என்ன வழி?'' என்று கன்வமகரிஷியிடம் வருந்தினாள் கங்கை. அவளிடம் துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் மாயூரம் சென்று காவிரியில் நீராடினால் உன் பாவம் தீரும் என்றார் கன்வமகரிஷி. அதன்படி மயிலாடுதுறை வந்து காவிரியில் நீராடினாள் கங்கை. காசியில் இருந்து கன்வரிஷி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த விஸ்வநாதரையும் வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இக்கோயிலில் வேறு எங்கும் காணமுடியாத ஸ்ரீநடராஜர் ரகசிய யந்திரம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் விசாலாட்சியை வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

தகவலுக்கு: 94430 71764.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.