கண்ணனின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை மையமாக வைத்து, பாட்டுடைத் தலைவனான கண்ணனை குழந்தையாக நினைந்து பெரியாழ்வார் பாடிய திருமொழியில் வரும் பாசுரம் இது. ஐந்தாம் திருமொழியில் இடம்பெற்றுள்ள இந்தப் பாசுரத்தில், குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தவனுக்குத்தான் அந்தக் குழந்தையின் அருமை தெரியும்; நீ அதன் வருத்தம் அறியாதவனோ என்று நிலாவைக் காட்டிச் சோறூட்டும் தாயார் கேட்பதாக ஆழ்வார் பாடியுள்ளார்.
சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும்காண்
தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வாகண்டாய்!
சந்திரனே! சுதர்ஸனம் எனும் திருவாழி ஆழ்வானை கையிலணிந்த கண்ணபிரான் என் இடுப்பின்மேல் இருந்துகொண்டு விசாலமான கண்களாலே மலரப் பார்த்து உன்னையே மகிழ்வால் சுட்டிக் காட்டுகின்றான்; உனக்குத் தகுதியானதை அறிவாயாகில் (அன்றியும்) பிள்ளைபெறாத மலடன் அல்லையாகில் கபடம் செய்யாமல் வந்து நில்.
சந்திரனே! இவனை வெறும் குழந்தையாக நினைத்து அலட்சியம் செய்திடாதே; இவன் சக்கரக்கையன்; நீ வராமல் இருப்பாயானால் உன் மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னை தண்டித்து விடுவான் பார் என்னும் கருத்தை அடக்கி சக்கரக்கையன் என்கிறாள் தாய் யசோதை. மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா என்று கூறுவதன் மூலம், குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக் கூடாது என்பது உனக்குத் தெரியுமே! என்று குழந்தையின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்னும் உளவியல் நுட்பத்தை ஆழ்வார் யசோதையின் வழியே காட்டுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


