சமைத்த உணவை உண்டு பரிசோதித்த பின்னரே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆட்சியர் வா.சம்பத் உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் அங்கன்வாடி உதவியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் வா.சம்பத் பேசியது: அங்கன்வாடி உதவியாளர்கள் தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை மையத்தை விட்டு செல்லாமல் குழந்தைகள் பாதுகாப்பாக வீடு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
சமையல் கூடத்தை தினமும் கழுவி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கேஸ் அடுப்பு என்பதால், கேஸ் லீக் ஆகிறதா என சோதனை செய்த பின்னரே அடுப்பை பற்ற வைக்க வேண்டும். சமையல் செய்யும் இடத்துக்குள் குழந்தைகள் செல்லாமல் இருக்க தடுப்புகள் வைக்க வேண்டும்.
உணவு பொருள்கள் ஈரம், காற்று ஆகியவற்றால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பருப்பு வகைகளில் பூச்சி, வண்டுகள் பிடிக்காமல் இருக்க வாரம் தோறும் வெயிலில் உலர்த்த வேண்டும். சமைக்கப்படும் உணவு பொருள்களின் அளவு அரசால் நிர்ணயித்த அளவுக்கு குறையாமல் எடுத்து சமைக்க வேண்டும்.
திறந்த வெளியில் சமைக்கக் கூடாது, தினமும் காலையில் குழந்தைகளின் வருகைக்கு ஏற்றவாறு உணவு தயாரித்து, உணவு வழங்கும் நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவே உணவு தயாராக இருக்க வேண்டும். உணவு பரிமாறப்படுவதற்கு முன்னதாக அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் இருவரும் உணவை உண்டு பார்த்து, உணவில் எவ்வித விஷத்தன்மையும் இல்லை என்பதை உறுதி செய்த பின்புதான் குழந்தைகளை வட்டமாக அமரவைத்து, தட்டு மற்றும் கைகளை கழுவிவிட்டு உணவு அருந்த வைக்க வேண்டும். மரங்களின் கீழே அமர வைத்து உணவு வழங்கக் கூடாது. அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் தவிர மற்ற நபர்களால் சமைக்கப்பட்ட உணவை பரிமாற அனுமதிக்கக் கூடாது.
தினமும் சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை பீங்கான் பாத்திரத்தில் எடுத்து மூடி வைத்து மறுநாள் காலையில் அப்புறப்படுத்த வேண்டும். பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். குழந்தைகள் வருகை மற்றும் வீடு சேர்வது முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இக் கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.பிரபாவதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் மற்றும் அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டு சமையல்காரரைத் அடித்து துன்புறுத்தியதாக பஞ்சாப் அணி வீரர் ஷஷாங் சிங் மீது வழக்குப்பதிவு!
நாகை எம்.பி. வை. செல்வராஜின் தந்தை வி. வைத்திலிங்கம் காலமானார்!

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI
விடியோக்கள்

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI

”இந்தியா முழுவதும் அதிகரிக்கும் போதைப்பொருள்கள்” திருமாவளவன் பேட்டி | VCK | TVK
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar


