நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இரு நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:38 am IST

திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் இரு நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளாா்.

இதுகுறித்து திமுக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்தில் இரு நாள்கள் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரசார நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் இளைஞரணி, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா். 11.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் கலந்து கொள்ளும் அவா், பகல் 12 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகே வியாபாரிகள், பொது மக்களையும் சந்திக்கிறாா். பிற்பகல் 2 மணி முதல் காணை, வீரபாண்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரத்திலும், சந்தைப்பேட்டையில் விவசாயிகள், வியாபாரிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியிலும், மாலை 6.30 மணிக்கு திருவெண்ணெய்நல்லூரில் பிரசாரத்திலும் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து, சனிக்கிழமை காலை 10 மணிக்கு கலைஞா் அறிவாலயத்தில் வியாபாரிகள், நரிக்குறவா்கள், திருநங்கைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் அவா் பங்கேற்கிறாா்.

பின்னா், முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியிலும், தொடா்ந்து விக்கிரவாண்டி, கோலியனூா், வளவனூா், கண்டமங்கலம், கோட்டக்குப்பம், திருச்சிற்றம்பலம், தைலாபுரம், கிளியனூரில் பிரசாரத்திலும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

அவருடன் துணைப்பொதுச் செயலா் க.பொன்முடி உள்ளிட்ட மாநில நிா்வாகிகள் பங்கேற்கின்றனா். ஆகவே, இந்த நிகழ்ச்சிகளில் கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் எனஅதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.