ஏழை -எளிய இந்து மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி விருதுநகரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. வின் மாநில பொதுச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு மக்களவைத் தேர்தலில் மோடியை முன்னிறுத்துவோம் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும், பொதுக் கூட்டமும் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கே. பாதசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாவட்ட செயலாளர் கஜேந்திரன் மற்றும் பொருளாளர் ஜே. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில அமைப்புச் செயலாளர் எஸ். மோகன்ராஜூலு கலந்து கொண்டு பேசும் போது, கடந்த 2007-ல் பள்ளிகளில் படித்து வரும் ஏழை முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பராமரிப்பு மற்றும் கல்வி உதவித் தொகையை மத்திய காங்கிரஸ் அரசு வழங்க உத்தரவிட்டது. இதில், ஏழை இந்து மாணவ, மாணவிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டனர். எனவே, கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையில் இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம். மத்தியில் பா.ஜ.க அரசு அமையும் 2014ம் ஆண்டு வரையில் போராடுவோம்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, மத்தியில் சிறந்த ஆட்சியை வழங்குவதற்காக பா.ஜ.க. சார்பில் முன்னிறுத்தப்பட இருக்கிறார். அவருக்கு உங்கள் ஆதரவை மக்களவை தேர்தலில் வழங்க வேண்டும். மேலும், இதையே வலியுறுத்தி திருச்சியில் வருகிற செப். 26ஆம் தேதி இளைய தாமரை மாநாட்டில் நரேந்திரமோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதையடுத்து, மீனவர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறிப்பிட்ட நாளில் மாநாடு நடத்தப்பட இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் ஏழை இந்து மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித் தொகை உடனே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 நாள்களுக்கு முன்பு குழந்தை இழப்பு... கோல் அடித்து சமர்ப்பித்த நெதர்லாந்து வீரருக்கு ரசிகர்கள் மரியாதை!
பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!

நடிகர் அஜித்தின் ஏகே - 64... யார்தான் தயாரிப்பாளர்?

பசியாற சோறு... நினைவாக மரக்கன்று..!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


