விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி சார்பில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ- மாணவியரின் அறிவியல் திறமையை வெளிக்கொண்டுவந்து சமூகத்திற்கு பயனுள்ளதாக செய்வதற்காக இந்த மெகா அறிவியல் கண்காட்சியை ஆகஸ்டு மாதம் 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடத்துகிறது. இதில் கலந்து கொண்டு சிறப்பிடம் பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1.95 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. சிறந்த படைப்பிற்கு நம்ம ஊரு விஞ்ஞானி-2013 என்ற விருது வழங்கப்படும். இது குறித்து வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரியின் தலைவர் டாக்டர் வி.பி.எம். சங்கர் (படம்) புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்ட மாணவ- மாணவியரின் அறிவியல் படைப்புகளை ஊக்குவித்து, அதனை சமுதாயத்திற்கு பயனுள்ளதாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இக் கண்காட்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் ஆகஸ்டு 29-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவியர் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலம் வந்து கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைக்கலாம்.
ஒரு பள்ளியில் இருந்து 2 நபர் கொண்ட 5 குழுக்கள் கண்காட்சியில் பங்கேற்கலாம். பதிவுக் கட்டணம் கிடையாது. கண்காட்சியை 31-ஆம் தேதி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை, அண்ணா பல்கலைக்கழக நானோ டெக்னாலஜி துறை இயக்குநர் ராம ஜெயவேல், டாக்டர் இ.கே.டி. சிவக்குமார் ஆகியோர் அடங்கிய குழு பார்வையிடும். அவர் மாணவர்களின் சிந்திக்கும் திறன் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படும் வகையில் உள்ள சிறந்த படைப்பை தேர்வு செய்வார்கள். இந்த முதல் படைப்பினை அமைத்த பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். 2-ஆம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரம் 2 பள்ளிகளுக்கு வழங்கப்படும். 3-ஆம் பரிசாக தலா ரூ. 15 ஆயிரம் வீதம் 3 பள்ளிகளுக்கு வழங்கப்படும். மேலும் 10 பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் சிறந்த மாணவர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நம்ம ஊரு விஞ்ஞானி 2013 என்ற விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் பள்ளிகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். கண்காட்சியை காணவரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அவர்களுக்கும் பரிசுகள் உண்டு. மேலும் கண்காட்சியில் பங்கேற்கும் பள்ளி மாணவ- மாணவியர் அனைவருக்கும் 3 நாட்களும் தங்கும் இடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
வெளியூர்களில் உள்ள பள்ளிகளில் இருந்து கண்காட்சியை காண வரும் மாணவ- மாணவியருக்கு கல்லூரி பேருந்து இலவசமாக ஏற்பாடு செய்துதரப்படும். கண்காட்சியை 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என். ஹரிஹரன் தொடங்கி வைக்கிறார். 31-ஆம் தேதி நடைபெறும் நிறைவு நாள் விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தங்களது படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்ய விரும்புவோர் வரும் 26-ம் தேதிக்குள் தங்களது பள்ளியின் பெயர், முகவரி, தொடர்பு தொலைபேசி எண், மாணவர் பெயர் அவரது படைப்பின் பெயர் மற்றும் மாணவரின் தொலைபேசி எண்ணுடன் வி.பி.எம்.எம். மகளிர் பொறியியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்- 626190, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கோ, மின்னஞ்சல் முகவரிக்கோ பதிவு செய்து கொள்ள வேண்டும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 97510-14966 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

11வது நாளாக சிஜேபி போராட்டம்: உண்ணாவிரதத்தினால் சோனம் வாங்சுக் உடல்நிலை மோசம்!

பென் ஸ்டோக்ஸிடம் பேச முயற்சித்தேன், ஆனால்... மெக்கல்லம் கூறியதென்ன?

2 நாள்களுக்கு முன்பு குழந்தை இழப்பு... கோல் அடித்து சமர்ப்பித்த நெதர்லாந்து வீரருக்கு ரசிகர்கள் மரியாதை!
பிஃபாவின் வரலாறு... 1942 உலகப் போரால் உலகக் கோப்பைக்கு வந்த சோதனை!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


