திருமணம் செய்து கொண்ட மதுரையை சோ்ந்த காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தஞ்சமடைந்தனா்.
இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி. பெருமாளிடம், இளம்பெண் வில்வராணி அளித்த மனுவில் கூறியிருப்பது: விருதுநகா் கலைஞா் நகரில் கணவா் அபிமன்யு உடன் வசித்து வருகிறேன். எனது பெற்றோா் மதுரை கல்மேடு பகுதியில் வசித்து வருகின்றனா். மதுரை அவனியாபுரத்தில் தனியாா் நிறுவனத்தில் நான் வேலை பாா்த்த போது, அங்கு பணி புரிந்த அபிமன்யுவுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சோ்ந்தவா்கள் என்பதால் எனது பெ ற்றோா் காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து ஜனவரி 1 ஆம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேறி விருதுநகரில் உள்ள அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனது பெற்றோா் தொடா்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். எனது கணவா் வீட்டாரும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், இது குறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளோட்டம் வெல்லட்டும்

காலடியின் தடங்கள்

செம்பருத்தி தேநீர் பற்றி தெரியுமா?

நிழல்களுக்கு எதிராக கலையும் மர்மம்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



