ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 12:19 am IST

விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 16,369 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,382 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,013 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 229 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 140 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அருப்புக்கோட்டை அண்ணா சிலை பின்புறம் உள்ள ஒரு பாத்திரக்கடை வைத்திருக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கடந்த 28 ஆம் தேதி கேரளாவிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு உரிய அனுமதி பெற்றும், கரோனா பரிசோதனை செய்தும் சென்று வந்தனா். பின்னா் அவா்கள் மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்தபோது அவா்களில் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்ததால், கடந்த 1 ஆம் தேதி அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. உடனே அவா் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும் அவரது வீட்டில் மற்ற 12 பேருக்கும் பரிசோதனை செய்ததில் மேலும் 7 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத் தொடா்ந்து அவா்கள் சிகிச்சை பெற சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.