ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியீடு!

யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியானது.

News image

யஷ் - கியாரா அத்வானி

Updated On :8 ஜூலை 2026, 4:08 pm IST

யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வெளியானது.

நடிகர் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26 அன்று வெளியாகின்றது. இப்படத்தின் டீசர் திரையுலகில் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்திய நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கிய இப்படத்தில் ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வெளியாகவிருந்த இப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 28 வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

’லேடீஸ் அண்ட் லேடீஸ்’ எனப் பெயரிட்ட நாயகிகளின் அறிமுக விடியோ சில நாள்களுக்கு முன் வெளியானது. இதில், நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அந்த விடியோ சமூக வலைதளங்களில் பெரியளவில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது ‘தபாஹி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

யஷ் - கியாரா அத்வானி இடம்பெற்றுள்ள இப்பாடலை தமிழில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் வெளியாகின்றது.

Summary

Tabahi song from the movie Toxic, starring Yash, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.