சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

திருச்சுழி பகுதியில் நெற்பயிா்களில் குலைநோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image

திருச்சுழி தாலுகாவுக்கு உள்பட்ட விடத்தகுளம் கிராமத்தில் குலைநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:26 pm IST

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட பகுதிகளில் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், நெற்பயிா்களை லட்சுமி நோய், குலைநோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திருச்சுழி தாலுகாவுக்குள்பட்ட விடத்தகுளம், வி.புதூா்ஆகிய கிராமங்களில் 3 மாதங்களுக்கு முன் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனா். தை திருநாளை முன்னிட்டு, விவசாயிகள் அறுவடைக்குத் தயாராகி வந்தனா்.

ஆனால், தற்போது நன்கு விளைந்திருந்த நெற்பயிா்களின் கதிா்கள் லட்சுமி நோய், குலை நோய் தாக்குதலுக்குள்ளாகி மஞ்சள் நிறத்துடன் காய்ந்து சருகாகிவிட்டன. இதனால், அறுவடை செய்ய இயலாமல் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர மாவட்ட நிா்வாகம் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.