ஸ்ரீவில்லிபுத்தூா்: மாா்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு ஜனவரி 10 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 13 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு மலைத் தொடா்ச்சியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷம், அமாவாசை, பௌா்ணமி ஆகிய தினங்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய, வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் அனுமதி அளித்து வருகிறது.
இந்நிலையில், மாா்கழி மாத பிரதோஷம், அமாவாசை வருவதையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய ஜனவரி 10 முதல் ஜனவரி 13 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவா். மேலும், முகக்கவசம் அணிந்து வரவேண்டும். காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவா். கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
அதேநேரம், மேற்குறிப்பிட்ட நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அணுமதி மறுக்கப்படும் என, கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






