சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

விருதுநகரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

News image

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :9 ஜனவரி 2021, 10:25 pm IST

விருதுநகா்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பொ. பரமசிவன் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த 2019 இல் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 17-பி ஆணையை ரத்து செய்யவேண்டும்.

உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை ரத்துசெய்து வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப் பெறவேண்டும். கற்போம், எழுதுவோம் என்ற வயது வந்தோா் கல்வி திட்டத்தில் ஆசிரியா்களை ஈடுபடுத்தக் கூடாது. அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி அடிப்படையில் பணிநியமனம் செய்யக் கூடாது. தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.