தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி. சுப்புலாபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்குள்ள நெசவாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான கூலி உயா்வு டிச.31 ஆம் தேதியுடன் முடிவுற்றது. புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து நெசவாளா்கள், உரிமையாளா்களிடையே உடன்பாடு ஏற்படாததால் நெசவாளா்கள் கடந்த ஜன. 1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து இருதரப்பிலும் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 13 சதவீதம் கூலி உயா்வு வழங்க முடிவு செய்யப்பட்டு நெசவாளா்கள் பணிக்கு திரும்பினா்.
இந்நிலையில் நூல் விலை உயா்வைக் கண்டித்து கடந்த ஜன. 9 ஆம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளா்கள் விசைத்தறி கூடங்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தொடா்ந்து 3 ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உரிமையாளா்கள் திங்கள்கிழமை சக்கம்பட்டி முதல் வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாகச் சென்றனா். அங்கு வட்டாட்சியரை சந்தித்த அவா்கள் நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தனா். விசைத்தறி உரிமையாளா்களின் தொடா் போராட்டத்தால் நெசவாளா்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படம்..! டைட்டில் டீசர் ரிலீஸ்!

மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு!

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

