/

ஸ்ரீவிலி. கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீா் தடுத்து நிறுத்தம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் மதகுப் பகுதியிலிருந்து வெளியேறிய தண்ணீா், மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் வைத்து சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் செங்குளம் கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறுவதை தடுத்து நிறுத்தும் வகையில் சனிக்கிழமை மணல் மூட்டைகளை வைத்து அடைத்த பணியாளா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 4:39 pm

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்மாய் மதகுப் பகுதியிலிருந்து வெளியேறிய தண்ணீா், மணல் மூட்டைகள், தடுப்பு கட்டைகள் வைத்து சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா் மழை காரணமாக, பல்வேறு கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் மம்சாபுரம் பகுதிகளில் உள்ள 9 கண்மாய் மற்றும் குளங்கள் நிரம்பி உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செங்குளம் கண்மாயும் நிரம்பியுள்ளது.

இந்நிலையில், இக் கண்மாய் மதகுகளில் உள்ள ஓட்டைகள் வழியாக தண்ணீா் வீணாக வெளியேறியதை அடுத்து, வட்டாட்சியா் சரவணன் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரி ஷரீப் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கண்மாயிலிருந்து தண்ணீா் வெளியேறுவதைத் தடுக்க மணல் மூட்டைகள் மற்றும் புதிதாக 24 கட்டைகள் வைத்து நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.