தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

வார பலன்கள் (ஜூன் 19 - 25) 12 ராசிகளுக்கும்! லாபம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

News image

ஜோதிடம் - DPS

Updated On :19 ஜூன் 2026, 1:16 pm IST
Updated On :19 ஜூன் 2026, 1:16 pm IST

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூன் 19 - 25) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தடைகளைக் கடந்து உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். தேவைக்கேற்ற வருமானம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அதிகம் நெருக்கம் காட்ட வேண்டாம். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

விவசாயிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூல் ஆகும்.

அரசியல்வாதிகள் சிலருக்குக் கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு ஓரளவு மிதமாகச் செலவு செய்வீர்கள்.

பெண்களுக்கு உடல் உபாதைகள் நீங்கும். மாணவர்கள் பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

சவாலான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பூர்விக சொத்து பிரச்னைகளில் தீர்வு உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள் வியாபாரிகள் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். விவசாயிகள் சிறந்த விளைச்சலைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

பெண்கள் கணவர் குடும்பத்தினரை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வருமானம் சீராக இருக்கும். அதேநேரம் குடும்பத்தில் சிறிய மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் விற்பனைகூடக் காண்பீர்கள். விவசாயிகள் புதிய விவசாய நிலங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையுடன் மோதல், வாக்குவாதம் போன்றவற்றைத் தவிர்ப்பீர்கள். கலைத்துறையினர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தற்பெருமை பேசுவதைக் குறைத்துக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இதுவரையில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் மகசூல் அதிகரித்து, நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் நிலைமைகளைப் புரிந்து கொண்டு கடமையாற்றுவீர்கள். கலைத்துறையினர் துறையில் ஆர்வத்தைக் கூட்டிக் கொண்டு உழைப்பீர்கள்.

பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்கள் ஆசிரியரிடம் நற்பெயரெடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

5சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதையோ, பணம் வாங்கித் தருவதையோ தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய மாற்றத்தைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு புதிய முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் புதிய பயிற்சிகளை கற்றுக் கொள்வீர்கள்.

பெண்களுக்கு இல்லத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டி வைத்து விடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

எதிர்காலம் குறித்த சிந்தனை மனதில் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் தனித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய தொண்டர்கள் கிடைப்பார்கள். கலைத்துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மிக, தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து ஆத்ம பலத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

மனதில் புதுவித ஆசைகள் துளிர்விடும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரியமாற்றி நற்பெயர் வாங்குவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பு செலவுகள் கூடுதலாகவே இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினருக்கு விடா முயற்சிகள் கைகொடுக்கும்.

பெண்கள் குழந்தைகளால் ஏற்படும் பிரச்னைகளை சாதூர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாணவர்கள் வெளி விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எதிலும் வேகத்துடன் செயல்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே இருக்கும். வியாபாரிகள் தங்கள் முயற்சிக்குத் தகுந்த லாபங்களைப் பெறுவீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி, விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ரசிகர்களுக்கு உதவி செய்வீர்கள்.

பெண்கள் அனைவரிடமும் கனிவாகப் பேசுவீர்கள். மாணவர்கள் ஆன்மிகத்திலும் நாட்டம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். வியாபாரிகள் மறைமுகத் தடைகளை முறியடிப்பீர்கள். விவசாயிகளின் கடின உழைப்பால் பணிகளில் மேன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் கடன் தொடர்பான பிரச்னைகளில் இருந்து சற்று விடுபடுவீர்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு சாதகமாக அமையும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து கடன்கள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தால் உபரி வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமையும். கலைத்துறையினர் சக கலைஞர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

பெண்கள் சுபநிகழ்ச்சிகளை நல்லபடியாக நடத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - ஜூன் 19, 20, 21.

11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

மனதில் இருந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். பொருளாதாரம் சீராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை மாற்றம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரிகள் பழைய கடன்களை அடைப்பீர்கள்.

விவசாயிகள் ஊடு பயிர்களைப் பயிரிட்டு மேலும் வருமானத்தை ஈட்டுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். கலைத்துறையினருக்கு வருமானத்தில் உயர்வு உண்டாகும்.

பெண்களுக்கு உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 22, 23.

12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தினரிடம் பாசம், அன்பு அதிகரிக்கும். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் தவறுகளைத் திருத்துவீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயலில் இறங்கி நேரடியாக வியாபாரத்தைக் கவனிப்பீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதுப்புது வாய்ப்புகள் வரும்.

பெண்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 24, 25.

Summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( June 19 - 25). Read and benefit.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.