தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூலை 10 - 16) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். சாதுர்யமாகப் பேசி வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் சலிப்படையாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து மகிழ்வீர்கள். விவசாயிகளுக்கு விளைபொருள்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு குறைவாகக் கிடைக்கும்.
பெண்கள் இனிய தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பீர்கள். மாணவர்கள் கோரிக்கைகள் நிறைவேற பெற்றோர்கள் உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
தொழிலில் போட்டி, பொறாமை குறையும். பூர்விகச் சொத்துகளில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்திலிருந்து புதிய பதவிகள் வரும். கலைத்துறையினருக்கு வருமானம் சீராகவே தொடரும்.
பெண்கள் கணவருடன் அன்புடன் பழகுவீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைத்து மகிழ்வார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
தொழிலை லாபகரமாக நடத்துவீர்கள். குடும்பத்தில் உங்கள் நிலை உயரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைப்பராமரிப்பு செலவு குறையும்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் கூடும். கலைத்துறையினர் துறையில் சிறப்பாக முன்னேறுவீர்கள்.
பெண்கள் குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் ஞாபகச் சக்தியை மேம்படுத்த அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பொதுக்காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக அமையும். வியாபாரிகளுக்கு செல்வந்தர்களின் உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் கடினமாக உழைத்து மகசூலைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரால் சில சங்கடங்களைச் சந்திப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மழலைச் செல்வங்களின் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
5சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். வியாபாரிகள் செலவு செய்யும்போது, கவனமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதால் லாபம் பெருகும்.
அரசியல்வாதிகள் மாற்றுக் கட்சியினரை அரவணைத்துச் செல்வீர்கள். கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருக்கும். பெண்கள் கணவர் குடும்பத்தினரின் சீரிய ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்களுக்கு பழைய முயற்சிகள் தற்சமயம் கை கொடுக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
சமுதாயத்தில் உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்து விடுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சில சலுகைகள் கிடைக்கும். தொழிலை சீராக நடத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பீர்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நன்மை உண்டாகும்.
அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத்துறையினரின் தனித் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் பெரியோர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 10.
7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எதுவுமிராது. நேர் வழியில் சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் பிரச்னைகளைத் தவிர்ப்பீர்கள். வியாபாரிகள் கடையை விரிபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும்.
அரசியல்வாதிகள் கட்சியில் உள்ள உள்கட்சி பூசலில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்களில் கவனமாக இருப்பீர்கள்.
பெண்கள் பெரியோரின் உதவியால் கஷ்டமான சூழல்களில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு வெளியே சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - ஜூலை 11, 12.
8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வெளியிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளில் அமைதி காப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் இணக்கமாகப் பழகுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவியால் நன்மை அடைவீர்கள். பெண்கள் புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள்.
மாணவர்கள் விளையாட்டில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 13, 14.
9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்துடன் திருத்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தேவையற்ற சிந்தனைகளைக் குறைத்துக் கொண்டு செயல்படுவீர்கள். கலைத்துறையினரின் செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். பெண்கள் தங்கள் செயல்களைத் திட்டமிட்டு செய்து, நற்பெயர் எடுப்பீர்கள்.
மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 15, 16.
10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் விறுவிறுப்பாக நடக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு போனஸ் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களின் கோரிக்கைகள்
உடனுக்குடன் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குத் தொண்டர்கள் அதிகரிப்பார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். தொழிலில் முக்கிய இலக்கை எட்டுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் அதிக பலன் பெறலாம். விவசாயிகள் புதிய விவசாய உரகரணங்களை வாங்குவர்.
அரசியல்வாதிகள் கட்சி வளர்ச்சிக்காக முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Summary
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( July 10 - 16). Read and benefit.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 3 - 9) 12 ராசிகளுக்கும்! வருமானம் உயரும் இந்த ராசிக்கு!

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு யாருக்கு?

வார பலன்கள் (ஜூன் 19 - 25) 12 ராசிகளுக்கும்! லாபம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு!

வார பலன்கள் (ஜூன் 12 - 18) 12 ராசிகளுக்கும்! எதிர்பாராத அதிர்ஷ்டம் யாருக்கு?
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 12 முதல் 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஃபிபா: ஆரம்பமாகிறது காலிறுதிச் சுற்று! | FIFA | FIFA World Cup |

MK Stalin உடன் மீண்டும் பேச்சா? குழப்பும் Thirumavalavan



