தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார பலன்களை (ஜூலை 24 - 30) துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
1மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பெயர், கெளரவம் உயரக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் பழகுவீர்கள். விவசாயிகளுக்கு விளைபொருள்கள் விற்பனையில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்குத் தக்க பயிற்சிகளை அளிப்பீர்கள். பெண்கள் இனிய தருணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பீர்கள்.
மாணவர்கள் கோரிக்கைகள் நிறைவேற பெற்றோர்கள் உதவுவார்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 24, 25.
2ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
புதிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவீர்கள். எதிரிகள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் வருமானம் கூடக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து புதிய கட்சிப் பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் சிக்கனமாக இருந்து புதிய செலவுகளைச் சமாளிப்பீர்கள்.
பெண்களுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 26, 27, 28.
3மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பேச்சிலும் அணுகுமுறையிலும் முதிர்ச்சி தென்படும். தொழிலில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரிகள் கடுமையாக உழைத்து முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைப் பராமரிப்பில் செலவு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளின் பெயரும் புகழும் உயரும். கலைத்துறையினர் துறையில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள்.
பெண்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஏற்ப சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க அதிகாலையில் எழுந்து படிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூலை 29, 30.
4கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
தடைபட்டிருந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து புகழ் அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக அமையும். வியாபாரிகளுக்கு செல்வந்தர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகள் மகசூலைப் பெருக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடமிருந்து ஒதுங்கி இருப்பீர்கள். கலைத்துறையினர் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் மழலைச் செல்வங்களின் வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் யோகா, பிராணாயாமம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
5சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். தொழிலில் சிறப்பான வளர்ச்சியைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதமாகும். வியாபாரிகள் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருந்து நஷ்டங்களைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுத்து லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் புதியவரிடம் எச்சரிக்கையுடன் பழகுவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகு புதிய முயற்சிகள் கைகூடும்.
பெண்கள் குடும்பப் பெரியவர்களின் அறிவுரை கேட்டு நடப்பீர்கள். மாணவர்கள் புதிய பாடப் பிரிவுகளில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
6கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
கடினமாக உழைத்து முன்னேறுவீர்கள். கடமையை கண்ணாக நினைப்பீர்கள். நண்பர்களுக்கு அறிவுரை வழங்குவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை, செயல்திறன் கூடும்.
உத்தியோகஸ்தர்கள் போனஸ் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சிப் பிரசாரத்துக்குப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். கலைத்துறையினருக்குத் திறமைகள் பளிச்சிடும். பெண்கள் பெற்றோரை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
7துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துகொள்வீர்கள். உங்களை வாட்டி வதைத்த பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் சில மனச்சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். வியாபாரிகள் அதிக செலவு செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நல்லபடியாக இருக்கும்.
அரசியல்வாதிகள் அமைதியாகக் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் பிறரிடம் ஒப்பந்தம் செய்யும் நேரத்தில் கவனமாக இருப்பீர்கள்.
பெண்கள் ஆன்மிகப் பெரியோரைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கனவு பலிதமாகும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
8விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
வெளியில் கொடுத்திருந்த கடன்கள் வசூலாகும். வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உயர்பதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் சாதகமான சூழல் நிலவும். விவசாயிகள் புதிய விவசாய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களின் உதவியால் புதிய நன்மைகளை அடைவீர்கள்.
பெண்கள் தைரியத்துடன் குடும்பப் பொறுப்புகளை சீராக ஏற்றுச் செயல்படுத்துவீர்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
9தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பிரச்னைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கடினமான வேலைகளைச் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.
அரசியல்வாதிகள் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினரின் செயல்களில் வேகமும் திறமையும் அதிகரிக்கும்.
பெண்கள் திட்டமிட்டுச் செலவு செய்து நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் வெற்றிக்காகத் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
10மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். மழலைச் செல்வமும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமையாகச் செயல்படுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். கலைத்துறையினரைத்தேடி புதிய பொறுப்புகள் வரும்.
பெண்கள் உற்றார் உறவினர்களிடம் தனித்தன்மையை நிரூபித்து விடுவீர்கள். மாணவர்களின் சில கோரிக்கைகள் தாமதமாக நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
11கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிகளைத் தீவிரப்படுத்தி திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகள் தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் புதிதாகச் சேர்வார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
12மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
ஈகோவை குறைத்துக் கொண்டு உற்றார் உறவினர்கள் நண்பர்களிடம் பழகுவீர்கள். குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் லாபம் கிடைக்கும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்குப் பயணங்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். கலைத்துறையினருக்குச் சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
Summary
Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week ( July 24 - 30). Read and benefit.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (ஜூலை 17 - 23) 12 ராசிகளுக்கும்! குழந்தை பாக்கியம் யாருக்கு?

வார பலன்கள் (ஜூலை 10 - 16) 12 ராசிகளுக்கும்! காரியம் கைகூடும் இந்த ராசிக்கு!

வார பலன்கள் (ஜூலை 3 - 9) 12 ராசிகளுக்கும்! வருமானம் உயரும் இந்த ராசிக்கு!

வார பலன்கள் (ஜூன் 26 - ஜூலை 2) 12 ராசிகளுக்கும்! பதவி உயர்வு யாருக்கு?
விடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay



